காரைக்குடியில் புதிதாக திறக்கப்பட்ட கடையில் ரூ.18 -க்கு பிரியாணி:திரண்ட மக்கள்

பல்வேறு வியூகங்களை வகுத்து மக்களை ஆர்வமடைய செய்வதன் மூலம், வியாபாரத்தை பெருக்க முயற்சிப்பது தற்போது டிரெண்டாகியுள்ளது;

Update: 2021-10-18 16:30 GMT

காரைக்குடியில் 18 ரூபாய் பிரியாணிக்காக வரிசையில் காத்திருந்த அசைவப்பிரியர்கள்

காரைக்குடி செஞ்சை பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பிரியாணி கடையில் 18 ரூபாய்க்கு மட்டன் பிரியாணி என்ற அறிவிப்பால் கடை முன்  மக்கள் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்தனர்.

புதிதாக திறக்கப்படும் கடைகள், புதிய புதிய சலுகைகளையும் அறிவித்து தங்களது கடையின் பெயரை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க பல்வேறு வியூகங்களை வகுத்து மக்களை ஆர்வமுடைய செய்தன் மூலம், வியாபாரத்தை பெருக்க முயற்சிப்பது தற்போது டிரெண்டாகியுள்ளது.இதன் தொடர்ச்சியாக, இன்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செஞ்சை பகுதியில் திறக்கப்பட்ட ஒரு பிரியாணி கடையில் ஒரு மட்டன் பிரியாணி 18 ரூபாய் என விளம்பரம் செய்யப்பட்டது.இதனை அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு நீண்ட கியூவரிசையில் நின்று பிரியாணியை வாங்கி சென்றனர்.


Tags:    

Similar News