காரைக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கொரோனாவால் தொழில் பாதிக்கப்பட்டு வறுமை நிலைமையில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும்;
காரைக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்தும், கொரோனா காலத்தில் தொழில் பாதிக்கப்பட்டு வறுமை நிலைமையில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரண தொகை, இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல், வயதான ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மாத ஓய்வூதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்குடி ஐந்து விளக்குப் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் கலந்துகொண்டு முழக்கமிடடனர்.