நடிகர்கள் கொள்கையை முன்னிறுத்தி அரசியலுக்கு வரவேண்டும்: எம்.பி கார்த்திசிதம்பரம்
மோடியும், நிர்மலா சீதாராமனும் ஆட்சியில் இருக்கும் வரை பெட்ரோல், டீசல் குறையவே குறையாது என்றார்;
விஜய் போன்ற பிரபல நடிகர்கள் பொதுவாழ்க்கைக்கு வரும்பொழுது நடிகர் என்ற முத்திரையோடு மட்டும் வருவதை விடுத்து அரசியல் கொள்கையை முன்நிறுத்தி வரவேண்டும் என்றார் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்திக் ப.சிதம்பரம்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:பாரம்பரிய கட்சியான அதிமுக தற்போது ஆளுமை திறமையுள்ள தலைமை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் தற்போது தலைவர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள், சரித்திர விபத்தில் பதவிக்கு வந்தவர்கள். அதிமுகவிற்கு தலைமை ஏற்க சசிகலாவிற்கு வாய்பிருக்கிறது. அதனை தொண்டர்கள் ஏற்று கொண்டாலும், மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.பொது சிந்தனை இல்லாமல் ஒரு சமுதாயத்தை மட்டும் மையப்படுத்தி இருக்கும் பாமக போன்ற கட்சிகள் தமிழ்நாட்டில் இல்லாமல் இருப்பதே நல்லது .
எல்லை பாதுகாப்பு படையை மாநில எல்லைக்குள் விரிவுபடுத்தி, தொடர்ந்து மாநிலங்களின் உரிமைகளை பாஜக பறித்து கொண்டிருக்கிறது. மோடியும், நிர்மலா சீதாராமனும் ஆட்சியில் இருக்கும் வரை பெட்ரோல் டீசல் குறையவே குறையாது என்றார் கார்த்திக்ப.சிதம்பரம்.