சென்ற ஆட்சியில் முறைகேடாக பணி நியமனம் பெற்ற நபர்கள் மீது உரிய நடவடிக்கை
சென்ற ஆட்சியில் முறைகேடாக பணி நியமனம் பெற்ற 236 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்தாார்;
சென்ற ஆட்சியில் முறைகேடாக விதிகளை மீறி பணி நியமனம் பெற்ற 236 நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக காரைக்குடியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேட்டியளித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இயங்கிவரும் ஆவின் பால் பண்ணையில் ஆய்வு மேற்கொண்டு, பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்டங்கள் பால்வளத் துறை அமைச்சர் நாசர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது: கடந்த ஆட்சியில் முறைகேடுகளாக பணியில் சேர்க்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டு, அதற்கான புதிய பணியிடங்கள் தமிழ்நாடு தேர்வாணையத்தின். மூலம் நிரப்பப்படும்.ஆவின் நிறுவனத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 10 ரூபாய்க்கு நூடுல்ஸ்.சேமியா, உடனடி பால் பவுடர் போன்ற பொருள்கள் முதன்முறையாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே பால்வள உயர்வில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.மாடுகளின் நலன், பால் உற்பத்தி, மற்றும் இன விருத்திக்காக தாது உப்பை இலவசமாகவும், மானியத்துடனும் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நாசர் தெரிவித்தார்.