டாக்டர் இல்லாத நேரத்தில்.... மெடிக்கல் உரிமையாளர் செய்த காரியம்!

மருந்து கடையை நடத்தி வரும் பெண், மருத்துவர் வராத நேரங்களில் தானே மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.;

Update: 2021-08-12 08:52 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கலைமணி நகரில் பாேலி மருத்துவர் வைத்திருந்த மருந்தகம்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கலைமணி நகரில் அழகு மெடிக்கல் சென்டர் என்ற பெயரில் மருந்தகம் ஒன்று உள்ளது. இந்த மருந்தகத்தில் மாலை நேரங்களில் காரைக்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஸ்டாலின் என்ற மருத்துவர் சிகிச்சை அளிக்க வருவது வழக்கம்.

இந்த மருந்து கடையை நடத்தி வரும் சுகன்யா சுந்தர்ராஜன் என்ற பெண் மருத்துவர் வராத நேரங்களில் தானே மாத்திரை மருந்துகள் வழங்குவது, ஊசி போடுவது என்று மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

இந்தப் பெண் மருத்துவம் பார்ப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி புகார் சென்றதை தொடர்ந்து சுகாதார துறை இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன் இன்று அந்த மருந்தகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அந்த பெண் பொது மக்களுக்கு மருத்துவம் பார்ப்பது உறுதி செய்யப்பட்டதால் அந்த மருந்து கடை பூட்டி சீல் வைத்த பின் அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது காரைக்குடி அழகப்பா காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போல் மாவட்டம் முழுவதும் அனுபவ ரீதியில் அலோபதி சிகிச்சை அளித்தால் அவர்கள் மீது புகார் தெரிவித்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என மருத்துவ இனை இயக்குநர் தெரிவித்தார்

Tags:    

Similar News