அப்துல்கலாமின் நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கான ஆலோசனை கூட்டம்.

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் நினைவு நாளன்று (ஜூலை 27) தமிழகம் முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு பசுமை இயக்கத்தின் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது;

Update: 2021-07-10 10:18 GMT

அப்துல்கலாமின் நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தேவகோட்டையில் பசுமை இயக்கத்தின் சார்பில் மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவு நாளான ஜூலை 27ம் தேதி "ஐயா அப்துல்கலாம் உயிர்த்தெழுகின்றார்" என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவு நாளான ஜூலை 27ஆம் தேதி தமிழகம் முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு பசுமை இயக்கத்தின் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.அதற்கான ஆலோசனை கூட்டம் இன்று பசுமை இயக்கத்தின் சார்பில் தேவகோட்டையில் நடைபெற்றது.

 அழிந்து வரும் பசுமையை காப்பாற்றி இதன் மூலம் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவது. வேலையில்லா படித்த பட்டதாரிகளுக்கு பசுமை பாதுகாப்பு படையில்பயிற்சி கொடுத்து அதற்கான சான்றுகளையும் கொடுத்து வேலை வாய்ப்பை உருவாக்குவது. விவசாயம் செய்ய முடியாத சூழலில் இருக்கின்ற விவசாயிகளிடம் நிலத்தை குத்தகைக்கு பெற்று அழிந்துவரும் விவசாயத்தை மீட்டெடுப்பது போன்ற நல்ல திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. .இக்கூட்டத்தில் சுற்று வட்டார பகுதிகளில் எழுத்து பசுமை இயக்க நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Tags:    

Similar News