தேவகோட்டை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் காரில் மோதி மரணம்

முன்னால் சென்ற காரை முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்;

Update: 2021-12-30 05:45 GMT

விபத்துக்குள்ளான கார்

தேவகோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் காரில் மோதி சம்பவ இடத்தில் பலியானார்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே திருச்சி - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் செலுகை பேருந்து நிறுத்தம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற ரினோத்குமார் (24) முன்னால் சென்ற காரை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் ரினோத்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

கார் ஓட்டுனர் சென்னையைச் சேர்ந்த லோகேஷ் (24) படுகாயத்துடன் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இறந்த வாலிபரின் உடலை தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தேவகோட்டை காவல்துறையினர் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News