900 நிமிடம் நிகழ்ச்சி நடத்தி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மாணவர்கள்
900 நிமிடம் நிகழ்ச்சி நடத்தி இந்திய சாதனை புத்தகத்தில் காரைக்குடி பள்ளி மாணவர்கள் இடம் பிடித்து உள்ளனர்.;
இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த காரைக்குடி பள்ளி மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு,காரைக்குடிஸ்ரீ ராஜராஜன் சி.பி.எஸ்.சி. தனியார் பள்ளி மாணவர்கள் பல்வேறு கலை திறமைகளை தொடர்ச்சியாக நிகழ்த்தி காட்டி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
இதற்காக 200 மாணவர்கள் இணைந்து, சிலம்பம், ஓவியம் வரைதல், கவிதை வாசித்தல், கட்டுரை எழுதுதல், யோகா, நடனம் போன்ற பல்வேறு கலைகளை தொடர்ந்து 900 நிமிடங்கள் நிகழ்த்தி காட்டி புதுச்சேரியை தலைமையிடமாகக் கொண்ட , ஆல் இந்தியா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்.
சாதனை நிகழ்த்திய மாணவ, மாணவிகளுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுப்பையா நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.