காரைக்குடி அருகே வெல்டிங் பட்டறை உரிமையாளர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை
காரைக்குடி அருகே வெல்டிங் பட்டறை உரிமையாளரை பட்டப்பகலில் ஓடஓட வெட்டிக் கொலை செய்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.;
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்த மகாலிங்கம் (44). இவருக்கு திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளது. இன்று காலை 8:00 மணியளவில் வீட்டிலிருந்து ரஸ்தாவில் உள்ள தனது வெல்டிங்பட்டரைக்கு மகாலிங்கம் டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின் தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல் குடிகாத்தான்பட்டி கண்மாய் அருகே அவர் சென்ற டூவீலரை இடித்து கீழே தள்ளினார். பின்னர் ஒட முயன்ற வெல்டிங் பட்டரை உரிமையார் மகாலிங்கத்தை மர்ம நபர்கள் பட்டபகலிலேயே ஒடஒட விரட்டி அரிவாளால் தலையில் வெட்டி கொலை செய்தனர். மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
தகலறிந்து வந்த தெற்கு காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து காரைக்குடி டி.எஸ்.பி வினோஜி தலைமையில் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட மகாலிங்கத்திற்கும், ஒரு பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு அப்பெண் தற்கொலை செய்துள்ளார். அந்த இறப்பிற்கு மகாலிங்கம் தான் காரணம் என கூறப்படுகிறது.
கடந்த மாதம் மகாலிங்கத்தின் தந்தை, பேத்தியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுப்படதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவரை ஜாமீனில் எடுக்க மகாலிங்கம் முயற்சி செய்துள்ளார். ஜாமீனில் எடுக்க தாய், சகோதரி எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இருவேறு கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.