ஆடி முதல் செவ்வாய்: அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் - முக கவசத்துடன் பக்தர்கள் தரிசனம்
காரைக்குடியில் மீனாட்சிபுரம் அருள்மிகு முத்துமாரிஅம்மன் கோவிலில்ஆடிச்செவ்வாயை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார்;
காரைக்குடியில் மீனாட்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரிஅம்மன் கோவிலில் ஆடி முதல் செவ்வாயை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட அம்மனை முக கவசத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மீனாட்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரிஅம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி முதல் செவ்வாய் விஷேசமாக கொண்டாடப்படும். கொரோனா தொற்று பரவல் காரணமாக குறைந்தளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர். .ஆடி முதல் செவ்வாய் கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து, தங்ககவசத்தில் முத்துமாரிஅம்மன் காட்சியளித்தார். பக்தர்கள் முக கவசத்துடன் அம்மனை வழிபட்டுச் சென்றனர்.