பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ சைக்கிள் ஓட்டி ஆர்ப்பாட்டம்.

Update: 2021-07-12 14:38 GMT

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ சைக்கிள் ஓட்டி ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் அதனை சார்ந்துள்ள அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்து வரும் நிலையில்,பெட்ரோல், டீசல், மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து இன்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக காரைக்குடி பெரியார் சிலை அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி சைக்கிளில் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நிலையில், மத்திய அரசையும்,பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.


Similar News