வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டால் கூட எச்.ராஜாவால் வெற்றி பெறமுடியாது.பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட காரைக்குடி நகர தலைவர் சந்திரன் பேட்டி.
வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டால் கூட எச்.ராஜாவால் வெற்றி பெறமுடியாது.பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட காரைக்குடி நகர தலைவர் சந்திரன் பேட்டி.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக நகர தலைவராக பதவி வகித்த சந்திரன் என்பவர் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக நேற்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சந்திரன் செய்தியாளர்களை சந்தித்த போது, எச்.ராஜா போன்றவர்கள் இருக்கும் வரை தமிழகத்தில் தாமரை மலர வாய்ப்பே இல்லை என்றவர், நாங்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் , ஒருதலை பட்சமானது.குற்றம் சாட்டிய எங்களை விசாரிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு என்றும் கூறினார்.
தேர்தலுக்கு 4/12 கோடி பணம் செலவாகிவிட்டது பணம் ஏதும் இல்லை என்று சொல்லி திரிந்தவர், தேர்தல் முடிந்த மருநாளே கல்லல் அருகே 27 ஏக்கர் தோட்டமும், காரைக்குடியில் பழைய வீட்டை புதுப்பிக்கவும் எச். ராஜாவிற்கு பணம் எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுப்பினார்.
எங்களது அடுத்தகட்ட நடிவடிக்கை என்னவென்பதை நிர்வாகிகளை கலந்தோசித்து இரண்டு நாளில் முடிவெடுப்போம் என்றும், காரைக்குடியில் பாஜக தோல்விக்கு முழு காரணம், எச்.ராஜா வும் அவருடைய உறவினர்களும் தான் என்றும் உறுதிபட கூறினார்.