சிறையில் இருப்பவர்கள் கதாநாயகர்களா?சிவகங்கையில்கார்த்திசிதம்பரம்கேள்வி
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்கள் ஹீரோக்கள் அல்ல.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்கள் ஹீரோக்கள் அல்ல என காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் இவ்வாறு கூறினார்.
மேலும்,ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைப்பவர்கள் ராஜீவ்காந்தியுடன் சேர்ந்து 16 பேர் கொலை செய்யப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர்களையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
25 வருடங்கள் ஆயுள் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யலாம் என்று சட்டம் இருந்தால் அதனை செயல்படுத்த எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் 25 வருடமாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர்கள் பலபேர் உள்ளனர். அவர்களையும் விடுதலை செய்ய வேண்டினால் அது ஏற்றுக்கொள்ள கூடியது
பேரறிவாளன் போன்றவர்களுக்கு மட்டும் விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல என்ற கார்த்தி சிதம்பரம்,கொரானாவை காரணம் காட்டி 100 நாள் வேலைவாய்பை நிறுத்தினால் அவர்களுக்கான ஊதியத்தை முறையாக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.