அடுத்தடுத்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூன்றுபேரை கைது
விசாரணையில் ஏற்கெனவே பலமுறை மருத்துவமனையில் வளாகத்திலும் பிற பகுதிகளிலும் இருசக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது.;
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்த குன்றக்குடி போலீசார் அவர்களிடமிருந்த டூ வீலர்களை பறிமுதல் செய்தனர்.
காரைக்குடி அருகே பெரியகாரை பகுதியை சேர்ந்தவர் ராகவேந்திரன் தனது உறவினர் சிகிச்சைக்காக காரைக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் வந்தார். மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி விட்டு தனது உறவினரை பார்க்கச் சென்று திரும்பி வந்து பார்த்தபோது. தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை. உடனடியாக குன்றக்குடி போலீசாரிடம் புகார் அளித்தார்.
போலீஸாரின் தொடர் விசாரணையில் ஏற்கெனவே இதேபோல் பலமுறை மருத்துவமனையில் வளாகத்திலும் பிற பகுதிகளிலும் இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது தெரியவந்தது. அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்ததில் டூவீலர் திருட்டில் ஈடுபட்டது சிவகங்கை இடையமேலூர் சேர்ந்த அஜய் (22) ,திருப்புவனம் பகுதியை சேர்ந்த வேலு (35), மதுரை பகுதியைச் சேர்ந்த இளையபாரதி (26 ) ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தை திருடியது விசாரணையில் தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர் .