சேலம் அயோத்தியாபட்டணம் பேரூராட்சியில் விஜய் மக்கள் இயக்க பெண் வேட்பு மனு தாக்கல்

சேலம் அயோத்தியாபட்டணம் பேரூராட்சியில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பெண் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Update: 2022-01-31 12:15 GMT

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த கலைச்செல்வி.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் பேரூராட்சி 1-வது வார்டில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் கலைச்செல்வி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மேளதாளங்கள் முழங்க நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் அயோத்தியாபட்டினம் பேரூராட்சி அலுவலகம் வந்து கலைச்செல்வி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Tags:    

Similar News