இளம்பிள்ளை ஊராட்சியில் வாகனத்தில் காய்கறி விற்பனை துவக்கம்

இளம்பிள்ளை உழவர் சந்தை மற்றும் பேரூராட்சி சார்பில் , வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை துவங்கியுள்ளது.

Update: 2021-05-27 13:55 GMT

தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வெகு வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து பொதுமக்களுக்கு காய்கறிகள் வீட்டுக்கு செல்லும் வகையில்  அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அவ்வகையில், இளம்பிள்ளை உழவர் சந்தை சார்பில், 14 வாகனங்களிலும்,  இளம்பிள்ளை பேரூராட்சி சார்பில் 2 வாகனங்களிலும் மொத்தம் 16 வாகனங்கள் மூலம்,  இளம்பிள்ளை டவுன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை காய்கறிகள் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

Tags:    

Similar News