திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவு: நுரை பொங்கி சாலையை சூழ்ந்ததால் அவதி

சேலத்தில், திருமணிமுத்தாற்றில் கலக்கும் சாயக்கழிவுகளால், நுரை பொங்கி சாலையை சூழ்ந்ததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

Update: 2021-07-13 07:15 GMT

சேலத்தில் அவ்வப்போது பெய்யும் மழையின் காரணமாக சேலம் திருமணிமுத்தாறு அதிகளவில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவது வழக்கம். அதே நேரம் ஆற்றில் தண்ணீர் வரும் நேரத்தில் சிலர் சாயக்கழிவுகளை ஆற்றில் திறந்துவிடுகின்றனர்.

சேலம் மாநகரம், கொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து சாயக்கழிவுகளை சிலர் நேரடியாக திருமணிமுத்தாற்றில் திறந்துவிடுகின்றனர். இதனால், உத்தமசோழபுரம், ஆத்துக்காடு ஆகிய பகுதியில் செல்லும் திருமணிமுத்தாற்றில் அதிகளவில் நுரை பொங்கி, வெண்மை நிறத்தில்  மலை போல் குவிந்து காட்சியளித்தது.

குறிப்பாக,  ஆத்துக்காடு வழியாக செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின. சாய நுரைகள் சாலையில் சூழ்ந்து கொள்வதால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து விடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி அந்தப் பகுதியில்  துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News