சேலத்தில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடக்கம்

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சேலத்தில் கடந்த 3 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த தடுப்பூசி போடும் பணிகள், இன்று மீண்டும் துவங்கின. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டு சென்றனர்.

Update: 2021-07-03 04:44 GMT

சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள செயிண்ட் மேரிஸ் பள்ளியில் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக காத்திருந்து பொதுமக்கள்.

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலும் தடுக்கும் வகையில், நூற்றுக்கும் மேற்பட்ட மையங்கள் மூலம், பொதுமக்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. எனினும், சேலத்திற்கு வந்த தடுப்பூசிகள் முழுவதும் காலியானதால், கடந்த 3 நாட்களாக அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. 

இந்நிலையில், நேற்று சென்னையில் இருந்து தடுப்பூசி வந்ததால், இன்று மீண்டும் தடுப்பூசி போடும் பணிகள் துவங்கின. மாவட்டம் முழுவதும் 138 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் 2880 பேருக்கு இரண்டாவது தவணை கோவாக்சின் தடுப்பூசியும், 50,700 பேருக்கு கோவிசீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியும், 1800 மாற்றுத்திறனாளிகளுக்கு கோவிசீல்டு தடுப்பூசியும் என மொத்தம் 55 ஆயிரத்து 380 பேருக்கு தடுப்பூசி போட சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கு பிறகு தடுப்பூசி போடும் பணிகள், சேலம் மாவட்டத்தில் துவங்கி உள்ளதால் அதிகாலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு சென்றனர்.

Tags:    

Similar News