சேலத்தில் இன்று 107 மையங்களில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி

சேலம் மாவட்டத்தில் இன்று, 107 மையங்களில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.;

Update: 2021-07-15 03:15 GMT

சேலம் மாவட்டத்தில் 107 மையங்களில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்க்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகிறது.

இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களை கொரோனா நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று,  சேலம் மாவட்டத்தில் உள்ள 107 அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்க்களுக்கு என பிரத்தியேக சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.

இம்முகாமில் கோவிஷில்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்படும். முகாமிற்கு தடுப்பூசி செலுத்த வரும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள்,  தவறாமல் தாய் சேய் நல பாதுகாப்பு அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, தவறாமல் உணவு உட்கொண்டு வர வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News