சங்ககிரி: வீடு வீடாகச் சென்று கபசுர குடிநீர் வழங்கிய தன்னார்வ அமைப்பினர்

சங்ககிரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் தண்ணீர் அமைப்பினர் நகர்ப்பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.

Update: 2021-05-31 05:15 GMT

சங்ககிரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் தண்ணீர் அமைப்பினர் நகர்ப்பகுதிகளில்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.

கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு  முழு ஊரடங்கு அறிவித்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி நகர் பகுதிகளில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தண்ணீர் தண்ணீர் அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க  நகர்ப்பகுதிகளில் தனிமனித இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிந்து தண்ணீர் தண்ணீர் அமைப்பு உட்பட  பல்வேறு அமைப்பினர் சார்பில் வீடு வீடாகச் சென்று கபசுர குடிநீர் வழங்கினர்.

Tags:    

Similar News