மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சங்ககிரி எம்.எல்.ஏ. ஆய்வு
மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், சங்ககிரி எம்.எல்.ஏ. சுந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டு, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கொரோனா பாதுகாப்பு கவசங்களை வழங்கினார்.;
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள சித்தா மருத்துவமனையில் பொதுமக்களுக்கு கபசுர பவுடர் மற்றும் கொரோனா சிகிச்சை மையத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு கொரோனா பாதுகாப்பு கவசம், முகக்கவசம், சானிடைசர், காய்ச்சல் வெப்பமானி உட்பட, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு கவசங்களை வழங்கினார்.
இதை தொடர்ந்து மகுடஞ்சாவடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை பார்வையிட்ட அவர், பின்னர் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் வேடியப்பன், வட்டாட்சியர் விஜி, மகுடஞ்சாவடி வட்டார மருத்துவ அலுவலர் முத்துசாமி உட்பட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.