ரேஷன் கடை பயோமெட்ரிக் நடைமுறை சிக்கல்: சேலத்தில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பயோமெட்ரிக் நடைமுறையில் உள்ள சிக்கல்களை சீர் செய்யக்கோரி சேலத்தில் மாதர் சங்கத்தினர் ரேஷன் கடை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் நடைமுறையில் உள்ள சிக்கல்களை சரி செய்ய வேண்டும்.
கேஸ் விலை உயர்வால் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சேலம் குகை பகுதியில் உள்ள ரேஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் குழந்தைகளுடன் பெண்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.