சேலம் மாவட்டத்தில் இன்று 133 மையங்களில் 32,480 தடுப்பூசிகள் போட ஏற்பாடு

சேலத்தில் இன்று 133 மையங்களில் 32,480 தடுப்பூசிகள் போடப்படுவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Update: 2021-06-25 02:22 GMT

சேலம் மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் பல கட்டங்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில்,  தற்போது சேலம் மாவட்டத்தில் கையிருப்பின் அடிப்படையில், இன்று பொதுமக்களுக்கு கோவாக்சின் இரண்டாம் தவணை மாற்று  கோவிஷீல்டு தடுப்பூசி, 133 மையங்கள் மூலம் 32,480 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

எனவே, மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட தடுப்பூசி மையங்களை அணுகி, முககவசம் அணிந்தும், உரிய சமூக இடைவெளி கடைபிடித்தும், கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மாற்றுத்திறனாளிகளுக்கு அவரவர் வசிக்கும் இடங்களுக்கு நேரில் வந்து தடுப்பூசி போடப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News