போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: காரணம் இதுதான்!

சேலத்தில், குடும்பத் தகராறில் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-04-25 15:21 GMT

மாதிரி படம்

சேலம்,  கிச்சிப்பாளையம் அருகே சன்னியாசிகுண்டு பகுதி, மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் லோகு (வயது 50). இவரது மனைவி தேவி (வயது 45). இவர்களுக்கு இடையே குடும்பத்தகராறு இருந்து வந்தது. இதில், ஆவேசத்தில் லோகு, தனது மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில்,  தேவி புகார் செய்தார். அதன்பேரில்,  விசாரணைக்கு வருமாறு லோகு, தேவி ஆகிய இருவரையும் போலீசார் அழைத்திருந்தனர். அதன்படி  கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக தேவி வந்திருந்தார்.

அப்போது, திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்த போலீசார், உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குடும்பத் தகராறில், போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு ஆஜரான பெண், தற்கொலைக்கு முயன்ற சம்பவம், சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News