முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் மூர்த்தி

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்த முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: வணிகவரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி;

Update: 2021-07-13 17:30 GMT

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்த முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ; வணிகவரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் வணிகவரித்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதைத் தொடர்ந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  கூறியது,

தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களையும் முதல்வர் செய்துள்ளார்.கடந்த ஆட்சி 5 லட்சம் கோடி கடன் வைத்து சென்றுள்ளனர்.இந்த நெருக்கடியை சந்தித்து தற்பொழுது சிறப்பாக திமுக ஆட்சி நடத்தி வருகிறது.குறிப்பாக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்த முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.மேலும் நேர்மையாக தொழில் செய்பவர்களுக்கு அரசு துணை நிற்கும் ; வணிகர் என்ற போர்வையில் அரசை ஏமாற்றும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பத்திரப்பதிவு துறையில் கடந்த ஆட்சியில் ஆள்மாறாட்டம், போலி பத்திரப்பதிவு உள்ளிட்ட தவறுகள் நடந்துள்ளது.இதை எளிமைப்படுத்த சில மாற்றங்களை கொண்டு வர உள்ளோம்.தவறான பத்திரபதிவுகள் மீது உடனடியாக தீர்வு காண அதிகாரிகளுக்கே அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் முறைகேடுகளில் ஈடுபட்ட அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.தமிழகத்தில் வரி செலுத்தாமல்,போலி ரசீதுகளுடன் வணிகம் செய்யும்  வணிகர்களை பிடிக்க பறக்கும் படை அமைக்கப்படும் என்றார்.

இதை தொடர்ந்து பேசியவர், இடைத்தரகர்களிடம் பணத்தை கொடுத்து மக்கள் ஏமாற வேண்டாம்; பொதுமக்களே நேரடியாக ஆன்லைன் மூலம் முத்திரைத்தாள் கட்டணத்தை கட்டலாம்.மற்றும் பத்திரபதிவை மேலும் எளிமையாக்க நடவடிக்கை; 10 நிமிடத்திற்கும் பொதுமக்கள் பத்திரத்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.யார் தலையிடும் இல்லாமல் வணிகவரித்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது.

Tags:    

Similar News