தொகுதி மக்களுக்கு ரொட்டி, முகக்கவசம், கபசுரக்குடிநீர் வழங்கிய சேலம் எம்.பி!
சேலம் தெற்கு தொகுதி மக்களுக்கு 5000 ரொட்டிகள், கபசுரக் குடிநீர், முகக்கவசம் உள்ளிட்டவற்றை சேலம் எம்பி பார்த்திபன் வழங்கினார்.;
கொரோனோ ஊரடங்கு காரணாமாக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத்தொகுதிகளில் கடந்த 13 நாட்களாக, பொதுமக்களுக்கு தொடர்ந்து கபசுரக்குடிநீர், முகக்கவசம், உணவு பொட்டலங்கள், ரொட்டிகள் ஆகியவற்றை பிரச்சார வாகனத்தின் மூலமாக வழங்கி வருகிறார்.
அவ்வகையில் இன்று, 14 -வது நாளாக சேலம் தெற்கு தொகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வழங்குவதற்கு 5000 ரொட்டிகள், கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசம் உள்ளிட்டவற்றை, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் அனுப்பி வைத்தார். பொதுமக்களுக்கு அவரே நேரடியாகவும் வழங்கினார்.