தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எத்தனை பேர்? விவரங்களை வெளியிட்டது சேலம் மாநகராட்சி

சேலம் மாநகராட்சி பகுதிகளில், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் விவரங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Update: 2021-06-19 13:08 GMT

சேலம் மாநகராட்சி  கொண்டலாம்பட்டி மண்லடத்துக்குட்பட்ட சரவணபவ நகரில் உள்ள முகாம் ஒன்றில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பொதுமக்கள். 

சேலம் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  மாநகராட்சி  நிர்வாகமும் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இதுவரை மாநகராட்சி பகுதியில் உள்ள சுகாதாரப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் தேர்தலின் பணியாற்றிய அலுவலர்கள் என 12,734 நபர்களுக்கு முதல் தவணை மற்றும் 5,284 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதிற்கு மேற்பட்ட 23,882 நபர்களுக்கு முதல் தவணை மற்றும் 11,331 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், 45 – 59 வயதிற்குட்பட்ட 30,215 நபர்களுக்கு முதல் தவணை மற்றும் 13,289 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 18 முதல் 44 வயது வரையிலான 23,527 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 38 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல் தவணை தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளதாக, மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News