சேலம் மாநகராட்சியில் ஒரேநாளில் 7,492 பேருக்கு தடுப்பூசி: ஆணையாளர் தகவல்

சேலம் மாநகராட்சியில் ஒரேநாளில் 7,492 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.;

Update: 2021-07-13 02:36 GMT

சேலம் மாநகராட்சி பகுதிகளில்,  8 நாட்களுக்கு பிறகு நேற்று தடுப்பூசி பணி தொடங்கியது. நேற்று மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற 33 கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் வாயிலாக, ஒரேநாளில் 7,492 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இதுவரை மொத்தம் 1 இலட்சத்து 86 ஆயிரத்து 462 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 42 ஆயிரத்து 564 நபர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளதாக ஆணையாளர் கிறிஸ்துராஜ் கூறியுள்ளார்.

Tags:    

Similar News