கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்துங்க: தலைமை செயலாளர் இறையன்பு அறிவுரை!

கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனைகளை தீவிரப்படுத்துமாறு, அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அறிவுரை வழங்கியுள்ளார்.;

Update: 2021-06-05 16:06 GMT

சேலம், ஈரோடு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தடுப்புப்பணிகள் குறித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழக தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில், இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், பொதுத்துறை செயலர் ஜெகநாதன் மற்றும் இரு மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 

கடந்த 10 நாட்களாக, இவ்விரு மாவட்டங்களில் நோய் பரவல் அதிகரித்து வருவதற்கு காரணம், இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த தலைமை செயலர், மாவட்டங்களில் எந்தெந்த பகுதியில் இந்நோய் தொற்று அதிகம் பாதித்துள்ளதோ அதற்கான காரணத்தை கண்டறிந்து அந்த பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், வீடுவீடாக ஆய்வு செய்து நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து, இதில் நோய் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து உயிரிழப்பை தவிர்க்க வேண்டும் என,  அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனைகளை வழங்கினார்.

Tags:    

Similar News