சேலம்: 2 இறைச்சிக்கடைகளுக்கு சீல்: 25 கிலோ கறி பறிமுதல்!

சேலத்தில் முழு ஊரடங்கை மீறி செயல்பட்ட இரண்டு இறைச்சிக் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். 25 கிலோ இறைச்சிகளையும் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-05-16 06:00 GMT
அதிகாரிகள் இறைச்சியை பறிமுதல் செய்த காட்சி.

தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையாக வரும் 24ஆம் தேதி வரை பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனிடையே இன்றைய தினம் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் அரசு உத்தரவை மீறி இறைச்சி கடைகள் செயல்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதனையடுத்து அப்பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தடையை மீறி செயல்பட்ட 2 இறைச்சி கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து அபராதம் விதித்தனர்.

அதேபகுதியில் வீட்டின் முன்பு சாலையில் வைத்து இறைச்சி விற்பனை செய்த நபருக்கு அபராதம் விதித்ததோடு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். 3 கடைகளில் இருந்தும் சுமார் 25 கிலோ இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News