பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சேலத்தில் ஆர்ப்பாட்டம்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் ,டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன் தலைமையில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் விலையை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வால் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என்றும், இந்த விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏறிக்கொண்டே செல்கிறது. கேஸ் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே மத்திய அரசு பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர்க கட்சியினர் கலந்து கொண்டனர்.