சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி..!

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-06-17 14:45 GMT

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களது இல்லங்களுக்கே மருத்துவக் குழுவினர் சென்று கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அஸ்தம்பட்டி மண்டலம், சின்னதிருப்பதி, சாந்தி நகர் எட்டாவது குறுக்குத் தெரு பகுதியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட, இதுவரை தடுப்பூசி செலுத்தாத மாற்றுத்திறனாளிகள் அனைவரும் 82485 13998 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால், அவர்களின் வீட்டிற்கே மருத்துவக் குழுவினர் சென்று தடுப்பூசியை செலுத்துவார்கள். தடுப்பூசி செலுத்த வரும் நேரம் குறித்த விபரங்களை தொலைபேசி வாயிலாக முன்னதாகவே அவர்களுக்கு தெரிவிப்பார்கள் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News