மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் கடன் வசூல் செய்தால் நடவடிக்கை: சேலம் கலெக்டர் எச்சரிக்கை!

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடன் தொகை செலுத்த இயலாத மகளிர் சுய உதவிக்குழுக்களிடம், கட்டாய கடன் வசூல் செய்யும் வங்கிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Update: 2021-06-09 11:17 GMT

சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவி குழுக்கள் பல்வேறு வங்கிகள், நுண்நிதி நிறுவனங்களில் கடன் பெற்று தொழில் செய்து வந்தன. இதனிடையே கொரோனா பரவல் காரணமாக,  தற்போது ஊரடங்கு  அமலில் உள்ளது.

இதன் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடன் தொகை செலுத்த இயலாத நிலையில், பல மகளிர் சுய உதவிக்குழுக்கள்  உள்ளன.அவர்களால் கடன் செலுத்த இயலாத சூழல் உள்ளது. இந்த விவகாரம், கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள வங்கிகள், தனியார் நிறுவனங்கள் கட்டாய கடன் வசூல் செய்யும் கடின நடவடிக்கையை தவிர்க்க வேண்டும்; இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்ட நிதி சார்ந்த அமைப்புகள் மீது சட்டபூர்வ நடவடிக்கை  மேற்கொள்ளப்படும் என, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News