சேலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்

சேலத்தில் 3 ஆவது நாளாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-05-26 07:45 GMT

சேலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம் 

தமிழகத்தில் கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலையில் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்நோய் தொற்றிலிருந்து இளைஞர்களை பாதுகாக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 20ஆம் தேதி திருப்பூரில் 18 வயது முதல் 44 வயது வரையிலான நபர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை இளைஞர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று சேலம் மாவட்டத்தில் 230 தடுப்பூசி மையங்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முழு ஊரடங்கு காலத்தில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர்.

Tags:    

Similar News