"உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டம்: சேலத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

சேலம் மாவட்டத்தில், "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டத்தை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை, முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2021-06-12 03:31 GMT

சேலத்தில், தமிழக முதலமைச்சரின் நிவாரணநிதிக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில் . தன்னார்வலர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிதியை வழங்கினர்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று திருச்சி தஞ்சாவூர் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, தனி விமானத்தில் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார். அங்கே அவருக்கு,  சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.

இதனையடுத்து கார் மூலம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின், "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற திட்டத்தின் கீழ் மனு அளித்திருந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நலத்திட்ட உதவிகளை 10 பயனாளிகளுக்கு வழங்கி, சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதை தொடர்ந்து, தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில் தன்னார்வலர்கள் நிதியை முதலமைச்சரிடம் வழங்கினர். "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 977 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் உடனடியாக 1100 மனுக்கள் மீது மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் இன்று முதல் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News