சிறப்பு நிதியுதவி திட்டத்தில் பயன்பெற பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்:சேலம் கலெக்டர்

சிறப்பு நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெற, பழங்குடியின மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்.;

Update: 2021-06-23 11:36 GMT

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்

சேலம் மாவட்டத்தில், 2020-2021-ஆம் ஆண்டிற்கான பழங்குடியினர் துணைத்திட்டத்தின்  கீழ்,  சிறப்பு நிதி உதவித்திட்டம் ( SCA to TSS)-கீழ் பழங்குடியினர் மக்கள் வசிக்கும் பகுதிகளில், பழங்குடியின மக்களுக்காக நிதி உதவி அளிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின்கீழ்,  தொகுப்பு வீடுகள் கட்டுதல், கறவை மாடுகள் வழங்குதல், பழங்குடியின விவசாயிகளுக்காக சோலார் மோட்டார் வழங்குதல், பழங்குடியின பெண்களுக்காக தையல் மெஷின் வழங்குதல் மற்றும் இளைஞர்களுக்காக  இளகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி மற்றும் உரிமம் வழங்குதல் ஆகிய திட்டங்களுக்காக பழங்குடியின மக்களுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயன்பெற விரும்ப்பழங்குடியின மக்கள், சாதிச்சான்றுடன் 16.07.2021 க்குள் திட்ட அலுவலகம் (பழங்குடியினர் நலம்) அறை எண்.305 மாவட்ட ஆட்சியரகம், சேலம் என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு, சேலம் மாவட்ட ஆட்சியர்  கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News