நகர்ப்புற தேர்தல்: அதிகாரிகள் தயாராக இருக்க மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்
நகர்ப்புற தேர்தலை எவ்வித பிரச்சனையும் இன்றி சந்திக்க அனைத்து துறை அதிகாரிகளும் தயாராக வேண்டும் என மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்.;
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றுக்கான நகர்ப்புற தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தேர்தல் அலுவலர்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கினார். குறிப்பாக மிகவும் சவாலான தேர்தல் பணியை சட்டத்திற்கு உட்பட்டு செய்தால், எவ்வித பிரச்னையும் இன்றி தேர்தலை சந்திக்க அனைத்து துறை அதிகாரிகளும் தயாராக இருக்க வேண்டும் என கூறினார்.