பாஜக வேட்பாளரை ஆதரித்து துணை நடிகை பிரச்சாரம்

பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரை ஆதரித்து திரைப்பட துணை நடிகை ரஞ்சனா நாச்சியார் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.;

Update: 2022-02-12 08:15 GMT
பாஜக வேட்பாளரை ஆதரித்து துணை நடிகை பிரச்சாரம்

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட துணை நடிகை ரஞ்சனா நாச்சியார்.

  • whatsapp icon

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், சேலம் மாநகராட்சி 46 ஆவது வார்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் பாஜக வர்த்தகப் பிரிவு மாவட்ட செயலாளர் கனகராஜின் மனைவி தேவிக்கு  வாக்கு சேகரிக்க பாஜக மாநில மகளிர் அணி செயற்குழு உறுப்பினரும் திரைப்பட துணை நடிகை அண்ணாத்த பட புகழ்  ரஞ்சனா நாச்சியார் ஈடுபட்டார். இவர், சேலம் குகை பகுதியில் உள்ள அம்பலவாண சுவாமி கோவில் தெரு, குகை மாரியம்மன் காளியம்மன் கோவில் தெரு, உள்ளிட்ட  பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

Tags:    

Similar News