பள்ளப்பட்டி மாரியம்மன் கோவில் சத்தாபரணம் விழா
சேலம் பள்ளப்பட்டி மாரியம்மன் கோவில் சத்தாபரணம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.;
சேலம் பள்ளப்பட்டி மாரியம்மன் கோவில் மாசி மாத திருவிழா கடந்த 2ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஒரு வார காலமாக பல்வேறு நிகழ்ச்சிகள், சிறப்பு பூஜைகள் நடந்து வந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சத்தாபரணம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனையொட்டி நடைபெற்ற சாமி ஊர்வலத்தில் பிரம்மாண்டமான முறையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக காளி நடனம், சண்டை மேளம், காட்டுப்பேச்சி நடனம் என பல நிகழ்ச்சிகளை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. மேலும் சத்தாபரணத்தையொட்டி மூன்று வகையான ரதங்கள் வடிவமைக்கப்பட்டிருந்த காவல் தெய்வங்களுக்கு காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாரியம்மன் உற்சவர் மலர் அலங்கார ரதத்தில் எழுந்தருளினார். இதேபோன்று பெருமாள் ரதம் முழுக்க முழுக்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டருந்த்து பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.