சேலத்தில் 203 நவீன சிசிடிவி கேமராக்களை போலீஸ் கமிஷனர் துவக்கிவைப்பு

சேலம் பள்ளப்பட்டியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 203 நவீன சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை மாநகர காவல் ஆணையாளர் துவக்கிவைத்தார்.;

Update: 2021-11-12 16:51 GMT
சேலத்தில் 203 நவீன சிசிடிவி கேமராக்களை போலீஸ் கமிஷனர் துவக்கிவைப்பு

நவீன சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை துவக்கி வைத்த சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா.

  • whatsapp icon

சேலம் மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்க மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநகரம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சேலம் பள்ளப்பட்டி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் 203 நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் செயல்பாட்டினை சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா இன்று துவக்கி வைத்தார். தொடர்ந்து சிசிடிவி பொறுத்துவதற்கு உறுதுணையாக இருந்த தன்னார்வலர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு சிறப்பு பரிசுகளை வழங்கினார். 

இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா  கண்காணிப்பு கேமரா நிறுவுவதன் மூலம் அவைகள் 24 மணி நேரமும் தொடர்ந்து தனது பாதுகாப்பு பணியை செய்வதோடு, குற்றங்களை விரைவாக கண்டறிய பயன்படுகிறது. மேலும் அந்த பகுதி   பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படும் எனவும், விரைவில் சேலம் மாநகர் முழுவதும் முக்கிய இடங்களில் அதிகப்படியான கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையாளர்கள் மோகன்ராஜ், மாடசாமி, காவல் உதவி ஆணையாளர் நாகராஜ்  மற்றும் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News