சேலத்தில் தங்க நகை பட்டறையில் பூட்டை உடைத்து பணம்- நகைகள் திருட்டு

சிசிடிவியில் பதிவாகி இருந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

Update: 2021-12-31 06:45 GMT

சேலத்தில் தங்க நகை பட்டறையில் பூட்டை உடைத்து பணம், நகைகள் திருட்டு 

சேலம் டவுனில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் நள்ளிரவில் தங்க நகை பட்டறையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரம் மாநிலத்தைச் சேர்ந்த நிக்கில் பட்டேல் என்பவர் சேலம் டவுனில் கடந்த 18 ஆண்டுகளாக தங்கத்தின் தரத்தை மதிப்பீடு செய்யும் பரிசோதனை பட்டறை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் பட்டறையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த முகமுடி கொள்ளையர்கள் லாக்கரில் இருந்த இரண்டு லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் இரண்டு பவுன் சுத்தத் தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த சேலம் டவுன் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடயவியல் நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சிசிடிவியில் பதிவாகி இருந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். டவுன் காவல் நிலையம் அருகே ஏராளமான நகை கடைகள் அடுத்தடுத்து அமைந்துள்ள பகுதியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி வியாபாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News