சேலம் அருகே மான் முயல் வேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது .

சேலம் டேனிஸ்பேட்டை அருகே மான் முயல் வேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது. 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

Update: 2021-04-11 08:00 GMT

மான், முயல் வேட்டையில்  கைது செய்யப்பட்டவர்கள்.

சேலம் டேனிஷ்பேட்டை சேர்வராயன் தெற்கு வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில்  மர்ம நபர்கள் இரவு நேரத்தில் மான் மற்றும் முயல் வேட்டையில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின்படி வனவர்கள் மோகன், பாலசுப்ரமணியன்,சேர்வராயன் தெற்கு வனச்சரக வனக்காப்பாளர்கள் கோபிநாத் பிரகாஷ்,அசோக்குமார், தனபால், விஜயகுமார்,ராஜேஷ் மற்றும் வனக்காவலர் தமிழ்வாணன் ஆகியோர் அடங்கிய குழு  குரும்பப்பட்டி காப்புக்காடு, தேக்கம்பட்டி பீட் பகுதிகளில் இரவு ரோந்துப் பணி மேற்கொண்டனர்.

அப்போது  நள்ளிரவு சுமார் 2 மணியளவில் தேக்கம்பட்டி பீட், டேனிஷ்பேட்டை சாலை சரகத்தில் இருவர் நாட்டு துப்பாக்கியுடன் மான் மற்றும் முயல் வேட்டையில் ஈடுபட வந்ததை அறிந்து அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில்  அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த மாதையன், மற்றும் அழகாபுரம் காட்டூர்  பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த வனத்துறை அதிகாரிகள் அவரிடம் இருந்த 2 நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். 

இவர்கள் இருவரும் தொடர்ந்து இரவு நேரத்தில் நாட்டு துப்பாக்கிகளைப் பயன்படுத்தி மான் & காட்டு முயல் போன்ற வனவிலங்குகளை வேட்டையாடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும்  வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags:    

Similar News