கா்நாடகாவில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு 700 மதுபாட்டில்கள் கடத்தல்
கா்நாடகாவில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு கடத்தி வரப்பட்ட 700 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அண்டை மாநிலங்களான கா்நாடகம், ஆந்திராவில் இருந்து சிலா் மதுப் பாட்டில்களைக் கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனா்.
கா்நாடகாவில் இருந்து சேலம் வழியே பல்வேறு ஊா்களுக்கு மதுப்பாட்டில்கள் லாரிகள் மூலமாகவும், கார் மூலமாகவும் கடத்தி செல்லப்படுவதாகப் புகாா் வந்தது. அதன்பேரில் சூரமங்கலம் உதவி ஆணையாளர் நாகராஜ் தலைமையில் போலீஸாா் கருப்பூா் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மதுப் பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 700 மதுப் பாட்டில்களைக் போலீசார் பறிமுதல் செய்ததோடு,மதுப் பாட்டில்களை கடத்தி வந்த கள்ளக்குறிச்சியை சோ்ந்த விவேக், என்பவரை போலீசார் கைது செய்தனா்.