சேலம் - சென்னை விமான சேவை இனி வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே!

சேலம் - சென்னை இடையே விமான போக்குவரத்து இனி வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே இயங்கும் என்று, சேலம் விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.;

Update: 2021-06-03 05:06 GMT

சேலம் - சென்னை இடையே நாள்தோறும் இயக்கப்பட்டு வந்த விமான சேவை, கொரோனா ஊடரங்கால் பயணிகள் வருகை குறைந்து, கடந்த மாதம் 2 முறை ரத்து செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, ஜூன் 1 ஆம் தேதி முதல், சேலம்- சென்னை விமான சேவை, மீண்டும் தொடங்கப்பட்டது. பொதுமுடக்கம் காரணமாக பயணிகளின் வருகை குறைவாக உள்ளதால், இனி வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களுக்கு மட்டுமே விமான சேவை அளிக்க உள்ளதாக, சேலம் விமான நிலைய இயக்குனர் ரவீந்திர சர்மா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News