பாரதப் பிரதமர் நுண்ணுயிர் பாசனத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
பாரதப் பிரதமர் நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற அழைப்பு;
கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளி கிராமத்தில் கீரை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டாரத்தில் நிகழாண்டு பாரத பிரதமர் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசனகருவிகள், தெளிப்புநீர் பாசன கருவிகள், மழைதூவான்கள் சிறு குறு விவசாயியிளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் 260 எக்டர் பரப்பளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நுண்ணீர் பாசன விவசாயிகளுக்கு துணை நீர் மேலாண்மை திட்டத்தில் குழாய்கள் அமைக்க 50 சத மானியம் அல்லது ரூ 10 ஆயிரமும் , டீசல் பம்ப் செட், மின்மோட்டர் அமைக்க 50 சத மானியம் அல்லது ரூ15 ஆயிரமும், தரை நீர்தேக்கத்தொட்டி அமைக்க கனமீட்டருக்கு ரூ850 வீதம் அதிகப்பட்சமாக ரூ40 ஆயிரம் மானியமான வழங்கப்படுகிறது.சொட்டுநீர் பாசன அமைக்க விரும்பும் விவசாயிகள் பட்டா, சிட்டா, அடங்கல் இ நில வரைபடம், சிறுகுறு விவசாயிகள் சான்று, ரேசன் கார்டு மற்றும் ஆதார் கார்டு நகல், 2 புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுக வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.நாகராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.