ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி: கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு!
சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி வானியர் தெரு பகுதியை சேர்ந்தவர் பார்வதி. இவருடைய மகன்கள் பாபு, ஞானவேல். இவர்களுக்கு சொந்தமான வீட்டுக்கு செல்லும் பாதையில் 5 அடி நீளமுள்ள வழித்தடத்தை நங்கவள்ளி ஒன்றிய பாமக தலைவர் பானுமதி மற்றும் அவருடைய கணவர் பாலசுப்ரமணியம் நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது .
இந்நிலையில் நேற்று பார்வதி மற்றும் அவரது மகன்களை பானுமதி தரப்பினர் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை தாெடர்ந்து இன்று பார்வதி, மற்றும் அவரது மகன்கள் பாபு, ஞானவேல் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். அப்பாேது மாவட்ட ஆட்சியர் கார் அருகே மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். அப்பாெழுது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி மீட்டனர்.
தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறியும் மிரட்டல் விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பார்வதி, மற்றும் அவரது மகன்களும் காவல் துறையினர் பேசிக் கொண்டிருந்தபோது பற்ற வைக்க முயன்றதால் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் தண்ணிரை பீச்சி அடித்து மண்ணெண்ணெய் கேன், தீப்பெட்டி ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக சேலம் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்