மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.;

Update: 2021-06-24 03:03 GMT

கர்நாடக மாநிலத்தில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கபினிஅணைப்பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக காவிரியில்  திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரித்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம்   89.15 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு : 51.68 டி.எம்.சி.யாக இருக்கிறது.  அணைக்கு நீர் வரத்து, வினாடிக்கு 2,376 கன அடியிலிருந்து, 7,492 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பால், விவசாயிகளும், மேட்டூர் மின்பிடிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News