தனியாக நின்ற மாற்றுத்திறனாளி பெண் அருகில் சென்று வரவேற்பை பெற்ற உதயநிதி
தனியாக நின்ற மாற்றுத்திறனாளி பெண்ணை கண்டு, காரில் இருந்து இறங்கி அருகில் சென்று அவரின் வரவேற்பை பெற்றுக் கொண்டார் உதய நிதி ஸ்டாலின்;
கெங்கவல்லி மற்றும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக சேலத்தில் இருந்து கார் மூலம் கெங்கவல்லி நோக்கி சென்றார் உதய நிதி ஸ்டாலின்.
முக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்கும் விதமாகவும், அவரை பார்க்கும் ஆர்வத்தில் வாழப்பாடி தேசிய நெடுஞ்சாலை அருகே இரண்டு கால்களும் இழந்த மாற்றுத்திறனாளி பத்மா என்ற பெண் தனியாக பூக்களை வைத்து கொண்டு காத்திருந்தார்.
இவரை பார்த்த உதயநிதி ஸ்டாலின், தனது வாகனத்தை நிறுத்த சொல்லி கீழே இறங்கி அவரின் வரவேற்பை பெற்று கொண்டு அவரிடம் சிறிது நேரம் பேசினார்.
தனியாக காத்திருந்த மாற்று திறனாளி பெண்ணைக் கண்டு அவரிடம் இறங்கி பேசியதால், மாற்று திறனாளி பெண் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்