சேலம்: வழிபாட்டுக்கு அனுமதி மறுப்பு என கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

சேலம் அருகே, கோவிலில் வழிபாடு நடத்த பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறி, கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.

Update: 2021-09-15 09:30 GMT

தலைவாசல் அருகே, பட்டியலின மக்களை கோவிலில் வழிபட அனுமதிக்கக்கோரி, சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த கிராம மக்கள்.

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள வடகுமரை கிராமத்தில்,  இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட, அருள்மிகு ஸ்ரீ காளகஸ்தீஸ்வரர் ஆலயம் மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம் உள்ளன. இதனுள், பட்டியலின சமுதாய மக்களை வழிபாடு, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சம்மந்தப்பட்ட கிராமத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர். இந்த இரு கோவில்களுக்கும் செல்லவும், வழிபாடு நடத்தவும் தங்களுக்கு அனுமதி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மனுவில் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News