அம்பேத்கர் சிலைக்கு எதிர்ப்பு; இருபிரிவினரிடையே மோதல், பதற்றம்

கெங்கவல்லி அருகே அம்பேத்கர் சிலை வைப்பதில் இரு பிரிவினர்களுக்கிடை மோதல், பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பதற்றம்.

Update: 2021-08-07 03:30 GMT

கெங்கவல்லி அருகே அம்பேத்கர் சிலை வைப்பதில் இரு பிரிவினர்களுக்கிடை மோதல் ஏற்படும் அபாயம் மற்றொரு தரப்பு பெண்கள் தர்ணாவின் ஈடுபட்டதால் பதற்றம் போலீஸ் குவிப்பு.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூர் கிராமத்தில் ஒரு தரப்பினர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு டாக்டர் அம்பேத்கர் சிலையை ஊர் பொது இடத்தில் வைத்துள்ளனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிப்பு தெரிவித்து வந்தனர்.

இதுகுறித்து ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் கெங்கவல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையில் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதில் ஒரு தரப்பினர் அம்பேத்கரின் சிலை கால் மீது கால்போட்டு அமந்ர்தபடி இல்லாமல், நின்றபடி உள்ள சிலை வைப்பதற்கு மட்டும் ஒப்புக்கொள்வதாக கூறியுள்ளனர். இதையடுத்து அதிகாரிகள் உரிய அனுமதி பெற்றபின் சிலையை வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து நேற்று இரவு ஒரு தரப்பினர் வைத்திருந்த சொர்க்க ரத வாகனத்தை மற்றொரு தரப்பினர் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் சொர்க்கரதத்தை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பேருந்து நிறுத்தம் அருகில் 200க்கும் மேற்பட்ட பெண்களுடன் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இருபிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை காணப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் DSP தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News